புதிய மாணவர் விடுதி

புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் புதிய மாணவர் விடுதி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Update: 2023-01-23 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்ப கல்லூரியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் தங்கமணி தலைமை தாங்கினார். விழாவில். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர் விடுதியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த விடுதி 600 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் செல்வமணி, விடுதி காப்பாளர் முரளி மற்றும் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அமிர்தராஜ்குமார், வர்த்தகர் அணி அமைப்பாளர் ராமச்சந்திரன், சத்தியமூர்த்தி, சேகர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்