ரூ.1 கோடிேய 40 லட்சம் மதிப்பில் புதிய சந்தை வளாகம்

அம்மாப்பேட்டையில் ரூ.1 கோடிேய 40 லட்சம் மதிப்பில் புதிய சந்தை வளாகத்தை அமைச்சர்கள் நேரு, அன்பிலமகேஷ்பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2023-04-28 20:15 GMT

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே .40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சந்தை கட்டிட வளாகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார், தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே முத்துச்செல்வன், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெ.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் ஷோபா ரமேஷ் வரவேற்றார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புதிய சந்தை கட்டிட வளாகத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ஜவாஹிருல்லா, ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன், பேரூராட்சி துணைத் தலைவர் தியாக.ரமேஷ், தி.மு.க. செயலாளர் தியாக.சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்