புதிய ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும்
நாங்குநேரி யூனியனில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும்- அமைச்சரிடம் கோரிக்கை மனு
இட்டமொழி:
தமிழ்நாடு உணவு துறை அமைச்சர் சக்கரபாணியை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சார்பில் நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
அதில், நாங்குநேரி யூனியன் பகுதிகளில் 10 பகுதி நேர ரேஷன் கடைகள் அமைத்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
அப்போது கட்சி நிர்வாகி தளபதிசமுத்திரம் செந்தில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அருள்ராஜ் ஜேம்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.