திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய ரேஷன் கடைகள்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 5 புதிய ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.கிருஷ்ணாபுரம், புதிய அத்திகுப்பம், முத்தம்பட்டி சமத்துவபுரம், ஆதியூர், தங்கபுரம் ஆகிய பகுதிகளில் புதிய ரேஷன் கடை திறப்புவிழா நடைபெற்றது.
மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க சார்பதிவாளர் தர்மேந்திரன் தொடக்க உரை நிகழ்த்தினார். கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.தசரதன் முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் திருமலை வரவேற்றார்.
புதிய ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க.தேவராஜி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பொதுமக்களுக்கு அரிசி, சக்கரை, வழங்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், வேளாண்மை கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ். ராஜேந்திரன், ஒன்றியக் குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தேவராஜன், பி.ஆர்.சின்னப்பையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதா உதயகுமார், வெங்கடேசன், எம்.ஆனந்தகுமார், மணிமேகலை ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் எம்.ஜி. என்கிற பூங்காவனம் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வி.சுரேஷ் நன்றி கூறினார்.