புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
தஞ்சை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஆஷிஷ் ராவத் பதவியேற்றார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஆஷிஷ் ராவத் பதவியேற்றார்.
போலீஸ் சூப்பிரண்டு
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ரவளிபிரியா சென்னைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட முத்தரசி பதவியேற்காத நிலையில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஆஷிஷ் ராவத் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று தஞ்சை மாவட்டத்தின் 62-வது போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுக் கொண்டார்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணி புரிந்த இவர் பதவி உயர்வு பெற்று புதுடெல்லியில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவில் 8-வது பட்டாலியன் கமாண்டெண்டாக நியமிக்கப்பட்டார்.
பதவியேற்பு
பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தற்போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுள்ளார்.இவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.