ரூ.3¾ லட்சத்தில் புதிய பேவர்பிளாக் சாலை
ஜோலார்பேட்டை அருகே ரூ.3¾ லட்சத்தில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சியில் துரை நகர் பகுதியில் உள்ள குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு இடையூறாக இருநத்து. இதனால் அப்பகுதி மக்கள் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.3.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சஞ்சீவிகுமார் வரவேற்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.மணிகண்டன் கலந்து கொண்டு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.