புதிய நெல் வளர்ப்பு வயல் விழா

புதிய நெல் வளர்ப்பு வயல் விழா

Update: 2022-08-20 18:23 GMT

திருவிடைமருதூர்

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பாண்டூர் கிராமத்தில் புதிய நெல் வளர்ப்பு ஏடி 17152 வயல்வெளி ஆய்வு திடல் மற்றும் பரவலாக்கம் பற்றிய வயல் விழா நடைபெற்றது. பயிர் மரபியல் துறை இணை பேராசிரியர் மணிமாறன் வரவேற்றார். இதில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன், வீரசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் நடராஜன், பயிர் மரபியல் துறை உதவி பேராசிரியர்கள் தண்டபாணி, புஷ்பா, உதவி பேராசிரியர் சாய் இளமதி, பூச்சி இயல் உதவி பேராசிரியர் ஆனந்தி, உதவி பேராசிரியர் சிவசங்கரி தேவி ஆகியோர் பேசினர். முன்னதாக ஆய்வு திடல் மற்றும் புதிய நெல் ரகங்கள் பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் அடங்கிய கண்காட்சியை விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்