திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை வழிபாடு
அனந்தமங்கலம் திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
பொறையாறு:
பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தனி சன்னிதியில் திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பால், தேன், இளநீர், சந்தனம் ஆகியவைகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் பத்ரி நாராயணன், செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.