புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

Update: 2022-10-21 18:23 GMT

கோட்டைப்பட்டினம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவர் தச்சுவேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் ஆமுர் பகுதியை சேர்ந்த சத்யா (19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் பாலமுருகன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது அவரது மனைவி சத்யா வீட்டில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெகதாபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் புதுப்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்