திருச்செந்தூர் நகராட்சி பகுதிக்கு ரூ.45 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

திருச்செந்தூர் நகராட்சி பகுதிக்கு ரூ.45 கோடியில் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2022-07-27 14:13 GMT

ஆறுமுகநேரி:

திருச்செந்தூர் நகராட்சியில் கவுன்சிலர்கள் சாதாரண உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கினார். ஆணையாளர் தி. வேலவன், துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகராட்சி பகுதியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கும் விடுதிகள் நகராட்சி அனுமதியின்றி இயங்கி வருகின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் குப்பைகள், மற்றும் கழிவுநீர் நகராட்சி மூலம் அகற்றப்படுகிறது

இதற்கென்று அதிகமான தொகையும் செலவிடப்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட விடுதிகள், கட்டிடங்களை, அனுமதிப்பதற்கான தொகையினை பெற்று, மேலும் அனுமதி இன்றி கட்டப்பட்ட அறைகளை அளவீடு செய்து அதற்கேற்ப வரி நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

மேலும், 27 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தற்போது குரங்கணி எல்லப்ப நாயக்கன் குளம், ஆத்தூர், காணம் போன்ற இடங்களில் இருந்து குடிநீர் கிடைத்து வருகிறது. ஆனால் மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கு ஏற்ப, இந்த குடிநீர் போதுமானதாக இல்லை. எனவே சீரான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கிட பொன்னன் குறிச்சி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வர வேண்டும். அதற்காக ரூ.45 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒதுக்கீடு செய்ய நகராட்சிகளில் இயக்குனரிடம் கோரிக்கை வைப்பது,

மேலும் குமாரபுரம், பாளையங்கோட்டை ரோடு, சுனாமி நகர், கரம்பவிளை, அமலி நகர், கமலா கார்டன் எடிசன் மருத்துவமனை, ஆகிய இடங்களில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் ேபவர் பிளாக் சாலைகள் அமைப்பது என்றும்,

சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களால் பயன்படுத்தப்படும் பொது கழிப்பிடங்களில் சானிட்டரி நாப்கின் எரிப்பான் எந்திரம் பொருத்துவது, பாதாள சாக்கடை திட்டத்தை பராமரிப்பது போன்ற பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்