புதிய மாவட்ட தாட்கோ அலுவலகம்
மயிலாடுதுறையில் புதிய மாவட்ட தாட்கோ அலுவலகம் வருவாய் அலுவலர் திறந்து வைத்தார்
நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு பல மாவட்ட அலுவலகங்கள் படிப்படியாக கொண்டுவரப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனியாக புதிய மாவட்ட தாட்கோ அலுவலகம் உருவாக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கி, அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். தாட்கோ மாவட்ட மேலாளர் சுசிலா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் அறிவழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.