கோவில்பட்டியில் புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பேற்பு

கோவில்பட்டியில் புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் பொறுப்பேற்றார்.

Update: 2022-07-28 11:44 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த உதயசூரியன் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டார். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரெண்டாக கி. வெங்கடேஷ் நேற்று பதவி ஏற்றார். இவர் கரூர் மாவட்டம் அரவங்குறிச்சி தாலுகா பொன்னா கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். குரூப் 1 தேர்வு எழுதி துணை போலீஸ் சூப்பிரெண்டாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 9 மாதம் பயிற்சி பெற்று, ராஜபாளை யத்தில் பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தார். நேற்று கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரெண்டாக பதவி ஏற்றார்.

அவர் கூறும்போது, 'கோவில்பட்டி நகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதுடன், அரசு தடை செய்துள்ள புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்