16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்; செங்கல்பட்டு-கமல் கிஷோர், காஞ்சீபுரம்-கலைச்செல்வி மோகன்

Update: 2023-05-16 21:04 GMT

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கமல் கிஷோரும், காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு கலைச்செல்வி மோகனும் கலெக்டராக பொறுப்பேற்கிறார்கள்.

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

* நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

* வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை இணை செயலாளர் ஆனி மேரி சொர்ணா, அரியலூர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

* கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் கலெக்டராக பதவியேற்பார்.

செங்கல்பட்டு கலெக்டர் கமல் கிஷோர்

* வணிக வரித்துறை (உளவுப்பிரிவு) இணை கமிஷனர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

* தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, நாமக்கல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* நில அளவை மற்றும் நில ஆவணத்துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் காஞ்சீபுரம் கலெக்டராக பொறுப்பேற்பார்.

* தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குனர் கமல் கிஷோர், செங்கல்பட்டு கலெக்டராக மாற்றப்படுகிறார்.

* வணிக வரித்துறை இணை கமிஷனர் (நிர்வாகம்) எம்.எஸ்.சங்கீதா, மதுரை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

* தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷா அஜித், சிவகங்கை கலெக்டராக பதவியேற்பார்.

* தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்பார்.

* செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

* சேலம் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் கலெக்டர்

* சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

* சேலம் ஜவ்வரிசி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.என்.பூங்கொடி, திண்டுக்கல் கலெக்டராக பொறுப்பேற்பார்.

* ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் கே.எம்.சரயு, கிருஷ்ணகிரி கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள துறைகள் பற்றிய விவரம் வருமாறு:-

* சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனர் டி.ஜி. வினய், தொழில்நுட்ப இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பதிவுத்துறை ஐ.ஜி.

* திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண்மை ஆணையராக பொறுப்பேற்கிறார்.

* தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்படுகிறார்.

* தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன், கைத்தறி ஆணையராக பொறுப்பேற்கிறார்.

* ஆசியர்கள் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர்

* நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார்.

* எழுதுபொருள் அச்சுத்துறை முன்னாள் கமிஷனராக இருந்த சுகந்தி அருங்காட்சிய ஆணையராக மாற்றப்பட்டார்.

* ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, நிதித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டார்.

* நில நிர்வாக கூடுதல் ஆணையர் சுப்புலட்சுமி, வணிக வரிகள் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

* கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.

வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர்

* காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, சர்வசிக்ஷ் அபியான் திட்ட இயக்குனர் ஆனார்.

* தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, உள், மதுவிலக்கும் மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

* நாமக்கல் மாவட்ட கலெக்டர் சிரேயாசிங், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்கிறார்.

* தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா, நகராட்சி நிர்வாக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

* ராஷ்மி சித்தார்த் ஜகாடே, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டார்.

வணிக வரிகள் இணை ஆணையர்

* பதிவுத்துறை ஐ.ஜி. சிவன் அருள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கலின் சிறப்பு பணி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் நந்தகோபால், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

* நிதித்துறை துணை செயலாளர் லட்சுமி பாவ்யா தன்னீரு, வணிக வரிகள் மற்றும் இணை ஆணையராக (ஈரோடு) இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்

* கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

* திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

* மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

கவிதா ராமு

* இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அதிகாரி இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனார்.

* புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.

* வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துறை தமிழ்நாடு சாலைகள் பிரிவு திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். அவர், சென்னை கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்