கோட்டை காவலர் உதவி மையத்தில் புதிய கேமரா பொருத்தம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக கோட்டை காவலர் உதவி மையத்தில் புதிய கேமரா பொருத்தப்பட்டது.
வேலூர் கோட்டை நுழைவுப் பகுதியில் உள்ள காவலர் உதவி மையம் பயன்பாடின்றியும், அங்குள்ள கேமரா உடைத்து எடுக்கப்பட்ட நிலையிலும் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி பிரசுரமானது. அதைத்தொடர்ந்து காவல் உதவி மையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும் உதவி மையத்தில் உடைந்த நிலையில் இருந்த கண்காணிப்பு கேமராவிற்கு பதிலாக புதிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.