ஆற்காடு அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள்

இடப்பற்றாக்குறையை போக்க ஆற்காடு அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

Update: 2023-08-21 17:40 GMT

திடீர் ஆய்வு

ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் உள்நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, காச நோய்கள் பிரிவு, தொற்றா நோய்கள் பிரிவு, மருந்தகம் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம் கேட்டதற்கு நாள்தோறும் குறைந்தபட்சம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இடமில்லை என தெரிவித்தனர்.

புதிய கட்டிடங்கள்

இதற்கான புதிய கட்டிடங்கள் வேண்டி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரிடம் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

புதிய கட்டிடங்களை பின்புறம் உள்ள கண் மருத்துவமனைக்கு அருகில் உள்ள காலியிடங்களில் கட்டுவதற்கு தேவையான திட்ட மதிப்பீட்டினை உடனடியாக தயார் செய்து வழங்க டாக்டர்கள் மற்றும் அலுவலர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

பின்பு அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது டாக்டர் கலையரசி மற்றும் செவிலியர்கள், மருந்தாளுனர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்