பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6½ கோடியில் அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம்
பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6½ கோடியில் அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பூமிபூஜையை தொடங்கி வைத்து, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர தி.மு.க. செயலாளர் முகமது இலியாஸ், பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், நிலைய மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, செவிலியர் கண்காணிப்பாளர் தேவசுகந்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒப்பந்ததாரர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், மருத்துவமனை அலுவலர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.