புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
பாணாவரம் அருகே புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பாணாவரம் அருகே மாலையமேடு கிராமத்தில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் சார்பில் நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாலையமேடு தொடக்க பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
அப்போது மத்திய அரசின் திட்டமான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் நன்மைகள் பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது. மேலும் ஊர்வலத்தின்போது எழுத, படிக்க தெரியாத 15 வயது மேற்பட்டோருக்கு கல்வியை எவ்வாறு வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஒன்றிய கவுன்சிலர் இராணி சேட்டு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஞ்சலி பாண்டியன், ஆசிரிய பயிற்றுனர்கள் ஸ்ரீதர், ராமராஜன், பள்ளி மேலாண்மை குழுதலைவர் சரஸ்வதி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.