வயலூர் முருகன் கோவிலில் புதிய முன்மண்டபம்

வயலூர் முருகன் கோவிலில் புதிய முன்மண்டப கட்டிட பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-08-14 19:23 GMT

திருச்சி அருகே வயலூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.4 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சுமார் ரூ.ஒரு கோடியே 79 லட்சத்தில் முன் மண்டபம் கட்டப்பட உள்ளது. இந்த பணியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பழனியாண்டி எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ், மணிகண்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கருப்பையா, அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், கோவில் அறங்காவலர்கள், சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருண் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்