ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
மயிலாடுதுறை அருகே ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ராஜகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா வரவேற்று பேசினார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.