ஒரே நாளில் புதிய மின்மாற்றி அமைப்பு

உளுந்தூர்பேட்டையில் வெடித்து சிதறிய ஒரே நாளில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.

Update: 2023-04-25 18:45 GMT

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை பாலையப்பட்டு அங்காளம்மன் கோவில் வளைவில் உள்ள மின்மாற்றி நேற்று காலை திடீரென பழுதாகி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், உடனடியாக புதிய மின்மாற்றி அமைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் உதவி செயற்பொறியாளர் சிவராமன், உதவி மின் பொறியாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அந்த இடத்தில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். இதை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. மாலையில் இயக்கி வைத்தார். இதில் திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன், வார்டு கவுன்சிலர்கள் கலா சரவணன், சந்திரகுமார், ரமேஷ் பாபு, நிர்வாகி ஐஸ்வர்யா, போர்மன் ஷண்முகம், கலியமூர்த்தி, மின் பாதை ஆய்வாளர்கள் கலைமணி, வெங்கடேசன் களப்பணியாளர்கள் ஏழுமலை, குமார், முருகன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்