தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பெரியகுளம் நகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2023-08-16 20:15 GMT

பெரியகுளம் நகராட்சியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெல்லையில் உள்ள தனியார் அறக்கட்டளை மூலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்த பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் நகராட்சி பகுதியில் பிடிக்கப்பட்ட 35 நாய்களுக்கு முதல் கட்டமாக கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை முகாமை நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், ஆணையர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் அசன் முகமது, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் பார்வையிட்டனர்.

மேலும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்