மாமியார் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட மருமகன்

உளுந்தூர்பேட்டை அருகே மாமியார் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட மருமகன் போலீசார் தீவிர விசாரணை

Update: 2022-10-05 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆமூர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்(வயது 33). இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிவாபட்டினம் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி(28) என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அய்யனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்