நேபாள இளம்பெண் தற்கொலை
கொடைக்கானல் அருகே, நேபாள நாட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நேபாள நாட்டில் உள்ள காளிகோட் பஞ்சாடா தெரு பெல்லாத்தா பகுதியை சேர்ந்தவர் பேணுபேக்குரியல். அவருடைய மனைவி கீதா ரோக்கையா (வயது 19). இந்த தம்பதியினர், கொடைக்கானல் அருகே உள்ள செண்பகனூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கீதா ரோக்கையா மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கீதா ரோக்கையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அடுக்கம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கீதா ரோக்கையாவுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆவதால், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜாவும் விசாரணை நடத்தி வருகிறார்.