நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெமிலி,
நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வக்கீல் கார்த்திகேயன், நெமிலி தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக நெமிலி டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மாணவர்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய கஞ்சா, குட்கா, மதுபானம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தகூடாது. சக மாணவர்கள் யாராவது கஞ்சா, குட்கா பயன்படுத்தினால் ஆசிரியர்களிடம் தெரிவிக்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருபாவதி, வக்கீல் ராஜேஷ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.