நெல்லை வாலிபர் கொலை வழக்கு:முக்கியகுற்றவாளி கோவில்பட்டி கோர்ட்டில் சரண்

நெல்லை வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியகுற்றவாளி கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2022-11-23 18:45 GMT

கோவில்பட்டி:

நெல்லை அருகேயுள்ள நடுக்கல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த குமாரவேல் மகன் நம்பிராஜன் (வயது 29). இவர் கடந்த 21-ந்தேதி இரவு பேட்டை சிப்காட்அருகில் கும்பல் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பேட்டை போலீசார் ஏற்கனவே, கோடகநல்லூர் பாலச்சந்தர்

உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நடுக்கநல்லூர் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த கெங்காபாண்டியந் மகன் சுந்தரபாண்டியன்(30) என்பவரு கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்.1-ல் சரணடைந்தார். அவரை வருகிற 30-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி கடற்கரைச் செல்வம் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்