நெல்லை ரெயில்கள் தாமதம்
சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை ரெயில்கள் தாமதமாக வந்தது.
மதுரை அருகே கூடல்நகரில் ரெயில் போக்குவரத்தில் திடீர் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக ரெயில்களை அனுமதிக்க முடியவில்லை. இருமார்க்கத்திலும் வந்த ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு, ரெயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இதனால் நெல்லைக்கு ரெயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக 1.15 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கு வந்து சேர்ந்தது. சென்னை -கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் காலை 6.45 மணிக்கு பதிலாக 8 மணிக்கு வந்து சென்றது.
இதே போல் பெங்களூரு -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் காலை 5.50 மணிக்கு பதிலாக 7 மணிக்கு வந்து சென்றது. தாம்பரம்-நாகர்கோவில் உள்ளிட்ட வாராந்திர ரெயில்களும் தாமதமாக வந்து சென்றன.