நெல்லை - மைசூரு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும்; ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு

தென்காசி, சங்கரன்கோவில் வழியாக நெல்லை - மைசூரு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.

Update: 2022-11-25 19:14 GMT

சங்கரன்கோவில்:

தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட திருவனந்தபுரம் ெரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தெற்கு ெரயில்வே புதிய பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கும் தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் சிறப்பு ெரயில்களை நிரந்தர ெரயில்களாக இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி சேவையாக மாற்ற வேண்டும், நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, பெங்களூரு வழியாக மைசூருக்கு வாராந்திர சிறப்பு ெரயில் இயக்க வேண்டும். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ெரயிலை மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு பயனில்லாமல் இயக்கப்படும் திப்ரூகர் - கன்னியாகுமரி ெரயிலை மதுரை, நெல்ைல வழியாக இயக்க வேண்டும். நெல்லை தாம்பரம் ெரயிலுக்கு சங்கரன்கோவில் ெரயில் நிறுத்தமும், நெல்லை பாலக்காடு பாலருவி ெரயிலுக்கு பாவூர்சத்திரம் ெரயில் நிறுத்தமும் வழங்க வேண்டும்.

முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் ெரயில் நிலையத்தின் நடைமேடைகளை நீட்டித்து, கூடுதல் நடைமேடைகளுடன் கூடுதல் ெரயில்கள் இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மேலும் ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுவதாக பொது மேலாளர் சிங் தெரிவித்துள்ளார். தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூரு, மைசூருக்கு வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கவும், திருச்செந்தூர் ெரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்