வாடகை பாக்கி: நெல்லையப்பர் கோவில் கடைக்கு `சீல்' வைப்பு

வாடகை பாக்கி வைத்திருந்த நெல்லையப்பர் கோவில் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2022-06-17 21:07 GMT

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலுக்கு சொந்தமான அனுப்பு மண்டப பகுதியில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு கடையை நடத்தி வந்தவர் ரூ.5 லட்சத்து மேல் வாடகை பாக்கி வைத்திருந்தார். இதையடுத்து அந்த கடையை கோவில் வசம் எடுத்துக் கொள்ள நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் அந்த கடைக்கு `சீல்' வைத்து கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, சூப்பிரண்டு சுப்புலெட்சுமி, மேற்கு பிரிவு ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்