நெல்லை-செங்கோட்டை ரெயில் நடுவழியில் நிறுத்தம்
சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை-செங்கோட்டை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
நெல்லை சந்திப்பு ெரயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.50 மணிக்கு செங்கோட்டைக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ெரயிலானது சேரன்மாதேவி ெரயில் நிலையம் கடந்து கூனியூர் அருகே சென்றது. அப்போது, சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த ெரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிக்னல் கோளாறை சரிசெய்தனர். இதையடுத்து சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.