நெல்லை: சொத்து தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - அண்ணன் வெறிச்செயல்...!

களக்காடு அருகே சொத்து தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-21 15:45 GMT

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜா (46). இவருக்கும் இவரது அண்ணன் ரத்தினக்குமார்(50) என்பவருக்கும் பூர்வீக சொத்தை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று ராஜா வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரத்தினக்குமாருக்கும், ராஜாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரத்தினக்குமார், ராஜாவை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராஜா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினக்குமாரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்