நெல்லை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட மின்மோட்டார் பழுது நீக்கம்
நெல்லை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட மின்மோட்டார் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
பேட்டை:
நெல்லை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, கொண்டாநகரம் தாமிரபரணி ஆற்றில் இருந்து அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே அரியநாயகபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மின்மோட்டார் பழுதாகி குடிநீர் வினியோகம் தடை பட்டது.
இந்த நிலையில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையில் ்அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் சீராக பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது 25-வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு, 22-வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.