மேட்டுப்பாளையம்-நெல்லை ரெயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்-நெல்லை ரெயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

Update: 2022-08-26 12:46 GMT

உடுமலை

மேட்டுப்பாளையத்தில் இருந்து உடுமலை வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலை, தினசரி ரெயிலாக மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேட்டுப்பாளையம்-நெல்லைசிறப்பு ரெயில்

மேட்டுப்பாளையம்-நெல்லைக்கு இடையேகோடை சிறப்பு ரெயிலாக கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதிமுதல் ஜூலை மாதம்1-ந்தேதி வரைவாரத்தில் ஒருநாள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக அடுத்த நாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.48 மணிக்கு உடுமலைக்கு வந்து, இங்கிருந்து 3.50-க்கு புறப்பட்டுகோவை வழியாக காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்

மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு7.45மணிக்கு புறப்பட்டுகோவை, பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10.33-க்கு வந்து, இங்கிருந்து10.35-க்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி வழியாக அடுத்தநாள் (சனிக்கிழமை)

காலை 7.45மணிக்கு நெல்லைக்கு சென்று சேர்ந்து கொண்டிருந்தது.

மீண்டும் இயக்க கோரிக்கை

இந்த சிறப்பு ரெயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பகுதியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளதால் ரெயிலில்பயணிகள் கூட்டம் இருந்தது.

இந்த நிலையில் இந்த ரெயில் தொடர்ந்து இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்தகட்டமாக இந்த சிறப்பு ரெயில் கடந்த மாதம் (ஜூலை) 21-ந் தேதி முதல் இந்தமாதம் (ஆகஸ்டு) 19-ந்தேதி வரை கடந்த மே, ஜூன் மாதங்களில் இயக்கப்பட்டது போன்று வாரத்தில் ஒருநாள் இயக்கப்பட்டு வந்தது.அதன் பிறகு இந்த ரெயில் சேவையை தொடர்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும், அதுவும் தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்