நெல்லை மேம்பால விபத்து - சிபிசிஐடி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மேம்பால விபத்தில், ஒருவர் உயிரிழந்தது குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பால விபத்தில், ஒருவர் உயிரிழந்தது குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர், கடந்த மே மாதம் 3ம் தேதி, நெல்லை சந்திப்பு பகுதியில் பால் வாங்க வந்தபோது, ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில், படுகாயமடைந்த வேல்முருகன், பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நிலையில், குற்றவாளிகளின் பெயர் சேர்க்கப்படவில்லை எனக்கூறி, வேல்முருகன் தரப்பு வழக்கறிஞர், ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகார்ஜுன், இந்த வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று கூறி, வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டார். வழக்கின் ஆவணங்களை நெல்லை சந்திப்பு காவல் ஆய்வாளர், சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.-யிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.