நெல்லை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கம்

வருகிற 11-ந் தேதி முதல் நெல்லை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.

Update: 2022-06-27 18:46 GMT

கொரோனா பாதிப்புக்கு முன்பு நெல்லையில் இருந்து ஈரோடு வரை பயணிகள் ெரயில் இயக்கப்பட்டு வந்தது.

இணைப்பு ரெயில்

இந்த பயணிகள் ெரயில் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்களுக்கு பெரும் வசதியாக இருந்து வந்தது. மேலும் மயிலாடுதுறை செல்வதற்கும் இதன் இணைப்பு ெரயில் பயனுள்ளதாக இருந்து வந்தது. கடந்த மார்ச் 2020-ல் கொரோனா பாதிப்பின் போது இந்த பயணிகள் ெரயில் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் முழுமையாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ெரயில்கள் இயக்கப்படும் நிலையில் இந்த ெரயில் மட்டும் இயக்கப்படாமல் தென்னக ெரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டியது.

எக்ஸ்பிரஸ் கட்டணம்

இதுதொடர்பாக தென்மாவட்ட மக்களும், எம்.பி.க்களும் வலியுறுத்தி வந்தனர். தற்போது தென்னக ெரயில்வே நிர்வாகம் இந்த ெரயிலை எக்ஸ்பிரஸ் ெரயிலாக வருகிற 11-ந் தேதி முதல் இயக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 11-ந் தேதி ெரயில் (எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. விருதுநகருக்கு மாலை 6.43 மணிக்கு வந்து 6.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இதேபோன்று 12-ந் தேதி ெரயில் (எண் 16846) நெல்லையிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டிற்கு மதியம் 2.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ெரயில் விருதுநகருக்கு காலை 8.13 மணிக்கு வந்து 8.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. பயணிகள் ெரயிலாக இயக்கப்பட்டு வந்த இந்த ெரயில் தற்போது எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்