நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

Update: 2022-11-01 21:17 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல், வாக்காளர் சேர்க்கும் பணி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள், இந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்