நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-04 19:16 GMT

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நெல்லையில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பொருளாளர் வண்ணை சேகர் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. அமைப்பு தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைவராக தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இளைஞர் பட்டாளத்தை திறம்பட வழி நடத்தி செல்லும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளான வருகிற 27-ந்தேதி கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி மிக சிறப்பாக கொண்டாட வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூத் கமிட்டி அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முகவர் நியமிக்க வேண்டி உள்ளது. இதற்கு நெல்லை, பாளையங்கோட்டை தொகுதி வாக்குச்சாவடிகளில் தி.மு.க.வின் களப்பணியாற்றும் ஆற்றல் மிக்கவர்களை நியமித்து பட்டியலை வருகிற 10-ந்தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.வி.சுரேஷ், விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, அன்பழகன், நெல்லை மாநகர அவைத்தலைவர் வேலு என்ற சுப்பையா, மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், துணை செயலாளர் மூளிக்குளம் பிரபு, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, மகேஸ்வரி, பிரான்சிஸ், சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞர் அணி ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்