நேரு பிறந்தநாள் விழா
செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவா் ராமர் தலைமை தாங்கினார். நகர துணைத்தலைவா் செண்பகம், நகர்மன்ற உறுப்பினா் முருகையா, மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகர இளைஞரணி செயலாளா் ராஜீவ்காந்தி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட ஜவஹா்லால் நேருவின் உருவப்படத்துக்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.