ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

Update: 2023-01-04 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள 30 விசைத்தறிக்கூடங்கள் மூலம் காட்டன் ரக சேலைகள் மற்றும் பேன்சிரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் மூலம் தொழிலாளர்களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் 50 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் விசைத்தறி நெசவாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் சுந்தர்லால், போலீஸ் துணை சூப்பிரண்டு .ராமலிங்கம் முன்னிலையில் நடந்த பேச்சுவார்தையில் முடிவு எட்டப்பவில்லை. இதனால் மீண்டும் வருகிற 6-ந்தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. வேலைநிறுத்த போராட்டத்தால் தினக்கூலி நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்