நீட் தேர்வு குறித்து ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பப்படும் : அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்

நீட் தேர்வு குறித்து ஆயுஸ் அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும்"

Update: 2023-01-22 11:08 GMT

சென்னை,

நீட் தேர்வு குறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் விளக்கம் கேட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்துறை மூலம் ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் எனவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,

தமிழ்நாடு முதல் அமைச்சர் இன்று காலை முதல் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறுபணிகளை ஆய்வு மேற்கொண்டார். சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனையை இரண்டாவது முறையாக இன்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட சாலைகள் சீர்செய்யும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறதுவெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீள்வதற்கு அரசுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அலுவலர்களுக்கும் வரும் 31ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

நீட் தேர்வு குறித்து ஆயுஸ் அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும்" என்று மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்