மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம்
மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன், முதல்வர் வில்சன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்பு கல்லூரியின் அனைத்து மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு நிலவேம்பு குடிநீர் நாட்டு நலப்பணிதிட்டம் சார்பில் வழங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜோகன்னா, ஜெய டேவிசன் இம்மானுவேல் மற்றும் ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் ஜீலியன்ஸ் ராஜாசிங் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.