டெங்கு, புளூ காய்ச்சலுக்கு தேவையான மருந்துகளை வழங்க வேண்டும்

வேகமாக பரவி வரும் டெங்கு, புளூ காய்ச்சலுக்கு தேவையான மருந்துகளை வழங்க வேண்டும் எனதமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-19 18:59 GMT

திருப்பத்தூர்

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வே.விஜயகுமரன் தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் பைரவநாதரன், மாநில பொருளாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் விஸ்வேஸ்வரன், மாநில இணைச்செயலாளர் வில்வநாதன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சேகர் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

889 மருந்தாளுனர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு மருத்துவ தேர்வு ஆணையம் மற்றும் தமிழக முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.

49 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட மருந்தாளுனர்களை பணிவரன் முறை செய்ய வேண்டும், நடமாடும் மருத்துவ குழு மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் புளூ காய்ச்சலுக்கு தமிழக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றார்.

முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் வேந்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்