விளாத்திகுளம் அருகே மினிவேனில் ரேஷன்அரிசி கடத்திய வியாபாரி கைது

விளாத்திகுளம் அருகே மினிவேனில் ரேஷன்அரிசி கடத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-18 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மினிவேனில் 45 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

மினிவேனில் சோதனை

விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் பகுதியில் குளத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழவைப்பார் சாலையில் இருந்து வைப்பார் நோக்கி மினிவேன் ஒன்று வேகமாக சென்றது.

அந்த மினிவேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் 45 மூட்டைகளில் ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதுகுறித்து மினிவேனில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

ரேஷன் அரிசி கடத்தல்

அவர் தொண்டைமான் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த அடைக்கலம் மகன் வெங்கடேசன்(வயது 49) என்பதும், வியாபாரியான இவர் ரேஷன் அரிசி மூட்டைகளை சட்டவிரோதமாக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

மினிவேனுடன் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

மேலும் இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் மினிவேன், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வெங்கடேசனை மாவட்ட குடிமை பொருள் அதிகாரிகளிடம் குளத்தூர் போலீசார் ஒப்படைத்தனர். அவரிடம் அந்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்