விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-05 15:47 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்த எட்டுராஜ் மகன் முத்துராஜ் (வயது 24). இவர் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முத்துராஜ் நேற்று வீட்டின் அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த விளாத்திகுளம் போலீசார் முத்துராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்