விளாத்திகுளம் அருகே டிராக்டர் மோதி மூதாட்டி பலி

விளாத்திகுளம் அருகே டிராக்டர் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-07-30 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி முனியம்மாள் (வயது 80). இவர் அங்குள்ள கிராம கண்மாய் கரையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே விழுந்து கிடந்த வேப்பமுத்துகளை எடுத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கீழ வைப்பாரில் இருந்து மேல்மாந்தை நோக்கி சென்ற டிராக்டர் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை ஒட்டி வந்த மேல்மாந்தை ஆத்திராஜ் மகன் பெருமாள் (30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்