விளாத்திகுளம் அருகே பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டியை ஆய்வு செய்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.

விளாத்திகுளம் அருகே பள்ளிக்கூடத்தில் காலை சிற்றுண்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-10-14 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள அயன் பொம்மையாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பனையடிப்பட்டி கிராமத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட காலை சிற்றுண்டியை சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டி சுகாதாரமற்று இருப்பதை கண்டு அதனை உடனடியாக சரிசெய்யும்படி உத்தரவிட்டார்.

மேலும் அப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்து விரைவில் முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று கோரிக்கைகள் மற்றும் குறைகள் கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்தார். பின்னர் கிராம மக்களிடம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு கேட்டுக்கொண்டார்.

விளாத்திகுளம் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பஞ்சாயத்து தலைவர் சண்முகலட்சுமி பாலமுருகன், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக அதிகாரி ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்