விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம் மேலஅருணாசலபுரம் ஊராட்சி வன்னிபட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, ஊரணி மேம்பாட்டு பணிகள் மற்றும் உலர்களம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் தலைமை தாங்கினார். புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கிராமங்களில் மரக்கன்றுகள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பூதலாபுரம் கிராமத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் நிறுத்தம், பேவர் பிளாக் சாலை மற்றும் ஊருணி மேம்பாட்டு பணிகனை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 33 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, உதவி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மகேந்திரன், மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூகவலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.