விளாத்திகுளம் அருகேமாட்டு வண்டி பந்தயம்
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
எட்டயபுரம்:
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266- வது குருபூஜை விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி கிராமத்தில் சூரங்குடி ரோட்டில் மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது. இந்த மாட்டு வண்டிபந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார.் பெரிய மாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தயம் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதிகளுக்கு, விழா கமிட்டி சார்பாக டி.வி., குத்துவிளக்கு, மிக்ஸி உள்ளிட்ட பரிசு பொருட்கள் நடந்தது. மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் குவிந்து கண்டு களித்தனர்.