விளாத்திகுளம் அருகேஆட்டோ கவிழ்ந்து 7 பெண்கள் காயம்

விளாத்திகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 பெண்கள் காயமடைந்தனர்.

Update: 2023-04-09 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்திலிருந்து மல்லீஸ்வரபுரம் கிராமத்துக்கு விவசாய பணி செய்வதற்காக 13 பெண்கள் நேற்று ஆட்டோவில் சென்றனர். மாலையில் திடீரென மழை பெய்யவே அவசர அவசரமாக விவசாய பணியை முடித்துவிட்டு ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர். விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி (54) ஆட்டோவை ஓட்டினார். ராமச்சந்திராபுரம் கிராமத்தை கடந்த நிலையில் திடீரென ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் அயன்பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலம்மாள் (59) ராசம்மாள் (65), உமையக்காள் (60), புஷ்பம் (70), மகாலட்சுமி (30), சேர்மபாக்கியம் (54), தங்கத்தாய் (42) ஆகிய 7 பேருக்கும் காயமடைந்தனர். அந்த 7பேரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்