வேப்பூர் அருகே வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்

வேப்பூர் அருகே வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-11 18:45 GMT

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழையால், வேப்பூர் ஒன்றியம் வலசை கிராமத்தில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் குடிநீர் எடுக்க வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மழைநீரை வெளியேற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மழைநீரை வெளியேற்ற வடிகால் வசதி அமைத்து தரக்கோாியும், குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்து தரக்கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்க உறுப்பினர் அமரேசன் தலைமையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் போராட்டத்தை தாங்களாகவே கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்