வெள்ளோட்டம்பரப்பு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்தது
தீப்பற்றி எரிந்தது
மொடக்குறிச்சி ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கட்டுமான பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரை நேற்று மதியம் 3 மணியளவில் அவருடைய உறவினர் கார்த்தி (வயது 29) என்பவர் ஓட்டிச்சென்றார்.
வெள்ளோட்டாம் பரப்பு அருகே கார் சென்றபோது, காரின் பின்புற ஸ்பீக்கரில் புகை வந்தது. உடனே காரை நிறுத்தி டிக்கியை திறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை அதற்குள் காரின் பின்புறம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக கொடுமுடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள். எனினும் கார் எரிந்து நாசமானது.